Published : 13 Mar 2021 03:13 AM
Last Updated : 13 Mar 2021 03:13 AM
சிவகங்கையில் சீட் மறுக்கப் பட்டதால் போர்க்கொடி உயர்த்தி வரும் அமைச்சர் ஜி.பாஸ்கரனுக்கு தங்களது பலத்தைக் காட்ட அதே பகுதியில் பி.ஆர்.செந்தில்நாதன் உள்ளிட்ட அதிமுக வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் ஊர்வலமாகச் சென்றனர்.
அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொகுதியான சிவகங்கை, மாவட்டச் செயலாளரான பி.ஆர்.செந்தில்நாதனுக்கு இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சரின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் ஊர்வலமாக சென்றும், மறியல் செய்தும் எதிர்ப்பைக் காட்டினர்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் பி.ஆர்.செந்தில்நாதன் (சிவகங்கை), எம்.மருதுஅழகுராஜ் (திருப்பத்தூர்), எஸ்.நாகராஜன் (மானாமதுரை) ஆகியோர் சென்னையிலிருந்து நேற்று சிவகங்கை வந்தனர். அவர்களுக்கு சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
மானாமதுரை வடக்கு ஒன் றியச் செயலாளர் சிவதரன் வெற்றிவேல் கொடுத்து வர வேற்றார். தொடர்ந்து கட்சியி னருடன் ஊர்வலமாக வந்த வேட்பாளர்கள், சிவகங்கை சிவன் கோயிலில் வழிபட்டனர். அதன்பின் அமைச்சருக்கு தங்களது செல்வாக்கை காட்டும் வகையில் ஊர்வலமாகச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT