Published : 13 Mar 2021 03:14 AM
Last Updated : 13 Mar 2021 03:14 AM

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள - 8,560 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு : ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 8,560 அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் தேர்தல் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி) ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 560 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கான கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

இதனை, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். இவர்களுக்கு 5 இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. வேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிகேஎம் மகளிர் கல்லூரி, காட்பாடி தொகுதிக்கு காட்பாடி வாணி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, அணைக்கட்டு தொகுதிக்கு புரம் ஸ்பார்க் மெட்ரிக் பள்ளி, கே.வி.குப்பம் (தனி) தொகுதிக்கு குடியாத்தம் கே.எம்.ஜி கலை கல்லூரி, குடியாத்தம் (தனி) தொகுதிக்கு திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளன. பயிற்சி வகுப்புகளுக்கான தேதி விரைவில் அறிவிக்க உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,783 வாக்குச் சாவடிகளில் காட்பாடியில் 349, வேலூரில் 364, அணைக்கட்டில் 351, கே.வி.குப்பத்தில் 311, குடியாத்தத்தில் 408 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில், காட்பாடி தொகுதியில் 1,964 பேர், வேலூரில் 2,029 பேர், அணைக்கட்டில் 1,951 பேர், கே.வி.குப்பத்தில் 1,278 பேர், குடியாத்தத்தில் 1,338 பேர் என மொத்தம் 8,560 பேர் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x