Published : 10 Mar 2021 03:13 AM
Last Updated : 10 Mar 2021 03:13 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தலை கண்காணிக்க - 9 பார்வையாளர்கள் நியமனம் தொகுதிகளுக்கு நாளை வருகை :

தூத்துக்குடி

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் 9 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல்ஆணையம் நியமித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் பணிகளை கண்காணிக்க அனைத்து தொகுதிகளுக்கும் வெளிமாநில தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சேர்த்து ஐஏஎஸ் அதிகாரி நிலையில் 5 பொதுப் பார்வையாளர்கள், ஐஆர்எஸ் அதிகாரி நிலையில் 3 தேர்தல் செலவினப் பார்வையாளர்கள், ஐபிஎஸ்அதிகாரி நிலையில் 1 காவல்துறை பார்வையாளர் என மொத்தம் 9 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

பொதுப்பார்வையாளர்களாக விளாத்திகுளம் தொகுதிக்கு இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி டோர்கே செர்லிங் நெகி, தூத்துக்குடி தொகுதிக்கு டெல்லியை சேர்ந்த ஜூஜ்ஜா வரபுபாலாஜி, திருச்செந்தூர் தொகுதிக்கு உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தசுஷில்குமார் பட்டேல், வைகுண்டம் தொகுதிக்கு உத்திரகாண்டைச் சேர்ந்த சாவின் பன்சால்,ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி தொகுதிகளுக்கு உத்திரபிரதேசத்தை சேர்ந்த அனில்குமார்ஆகிய 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் செலவினப் பார்வையாளர்களாக விளாத்திகுளம் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளுக்கு ஏ.எஸ்.சான்ட், திருச்செந்தூர் மற்றும் வைகுண்டம் தொகுதிகளுக்கு ராகேஷ் தீபக்,ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி தொகுதிகளுக்கு சுரேந்திரகுமார் மிஸ்ரா ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல் மாவட்டம் முழுவதும் 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சேர்த்து காவல்துறை பார்வையாளராக மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி சப்யாசாச்சி ராமன் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் மூவரும் வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் மார்ச் 12-ம் தேதி அந்தந்த தொகுதிகளுக்கு வந்து பணிகளை தொடங்குகின்றனர். காவல் துறை பார்வையாளர் மற்றும்பொதுப் பார்வையாளர்கள் வரும்19-ம் தேதி வந்து பணிகளை தொடங்குவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x