Published : 10 Mar 2021 03:13 AM
Last Updated : 10 Mar 2021 03:13 AM
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரி வித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. நீச்சல் குளத்தை மக்கள் பயன்படுத்தவும், விளையாட்டு வீரர்கள் பயிற்சி செய்யவும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. நீச்சல் உடையுடன் வருபவர்கள் மட்டுமே, நீச்சல் குளத்தை பயன்படுத்த அனுமதிக் கப்படுவார்கள். நீச்சல் குளத்தை பயன்படுத்தும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
10 வயதுக்கு உட்பட்டவர்கள், 64 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருப் பவர்கள் நீச்சல் குளத்தை பயன் படுத்த அனுமதி இல்லை. சோப்பு பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும். விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 04175 – 233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT