Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் காமராஜர் நகரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழனிச்சாமி என்பவரது காரை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4 லட்சத்து 84 ஆயிரம் எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து இப்பணத்தை பறக்கும் படை சிறப்பு அதிகாரி பொன்னுலெட்சுமி பறிமுதல் செய்தார். இப்பணம் தேர்தல் அதிகாரி கல்யாணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT