Published : 19 Feb 2021 03:24 AM
Last Updated : 19 Feb 2021 03:24 AM
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 17-ம் தேதி முதல் 23 வரை தேதி வரை தேசிய காசநோய் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு காசநோய் விழிப்புணர்வு வாரம் நேற்று முன்தினம் தொடங்கியது.
இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 'காசநோயை ஒழிப்பதற்கான நமது போராட்டத்தை துரிதப்படுத்துவோம்' என்ற பெயரில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி பாலன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
மருத்துவப்பணிகள் துணை இயக்குநர் (காசம்) க.சுந்தரலிங்கம் பேசும்போது ‘'சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், புகைபிடிப்போருக்கு காசநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அவர்களுக்கு காசநோய் அறிகுறிகளான காய்ச்சல், இரண்டு வாரம் தொடர் இருமல், எடை குறைதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்'’ என்றார்.
நெஞ்சக நோய் பிரிவு தலைமை மருத்துவர் சங்கமித்திரா, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெபமணி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், காசநோய் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு '2025-க்குள் இந்தியாவில் காசாநோய் இல்லாமல் ஆக்கிடுவோம்' என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
வல்லநாடு
இதேபோல் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய காசநோய் பிரிவில் வட்டார மருத்துவ அலுவலர் மு.சுந்தரி தலைமையில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி மருத்துவ அலுவலர் டாரில், சித்த மருத்துவ அலுவலர் ச.செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT