Published : 17 Feb 2021 03:13 AM
Last Updated : 17 Feb 2021 03:13 AM

திருச்செந்தூரில் மாசித் திருவிழா இன்று தொடக்கம் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்‌ மாசித் திருவிழா இன்று (17.02.2021) தொடங்கி 28.02.2021 வரை நடைபெறுகிறது. சுவாமி புறப்பாடு மற்றும்‌ தேரோட்டம்‌ ஆகியவை கோயிலுக்கு வெளியில்‌ நடைபெறவுள்ளது. இன்று காலை 5 மணிக்கு மேல்‌ 5.30 மணிக்குள் நடைபெறும் கொடியேற்ற நிகழ்வில் சுமார்‌ 500 பக்தர்கள்‌ மட்டுமே அனுமதிக்கப்படுவர்‌. 5-ம்‌திருநாள்‌ அன்று இரவு 7:30 மணியளவில் நடைபெறும்‌ குடைவரை வாயில்‌ தீபாராதனை நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 1,000 பக்தர்கள்‌ அனுமதிக்கப்படுவர்‌. 7-ம்‌ திருநாள்‌ (23.02.2021) அன்று அதிகாலை 4.30 மணி முதல்‌ 5 மணி வரை நடைபெறவுள்ள உருகு சட்ட சேவை மற்றும்‌ காலை 8.30 மணியளவில்‌ நடைபெறும்‌ வெற்றிவேர் சப்பரம்‌ எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகளில் 1,000 பக்தர்கள்‌ அனுமதிக்கப்படுவர்‌. அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும்‌ சிவப்பு சார்த்தி நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 500 பக்தர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்படுவர்.

8-ம்‌ திருநாள்‌ (24.02.2021) அன்று பகல்‌ 11.30 மணிக்கு நடைபெறும்‌ பச்சை சார்த்தி நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 1,000 பக்தர்கள்‌ அனுமதிக்கப்படுவர்‌. 10-ம்‌ திருநாள்‌ (26.02.2021) காலை 7 மணி முதல்‌ 7.30 மணி வரை நடைபெறும்‌ தேரோட்ட நிகழ்ச்சியில்‌ சுமார்‌ 1,000பக்தர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்படுவர். 11-ம்‌ திருநாள்‌ (27.02.2021) இரவு 10.30 மணிக்கு மேல்‌ நடைபெறும்‌ தெப்ப உற்சவநிகழ்ச்சியில்‌ சுமார்‌ 500 பக்தர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்படுவர்.

பக்தர்கள்‌ கண்டிப்பாக முகக்கவசம்‌ அணிந்து வர வேண்டும்‌. திருக்கோயில்‌ மூலம் அன்னதானம்‌ பார்சல்‌ செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும்‌. கொடியேற்றம்‌ நிகழ்ச்சியை சண்முகவிலாசத்துக்கு வெளியில்‌ (தென்கிழக்கு) அகன்ற எல்இடிதிரை அமைக்கப்பட்டு, நேரடியாகஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடிப்பட்டம் வீதியுலா

மாசித் திருவிழாவை முன்னிட்டு கொடிப்பட்டம் வீதியுலா நேற்று மாலை நடைபெற்றது. 1-ம் படிசெப்புபடி ஸ்தலத்தார் முத்துசாமிகொடிப்பட்டத்தை யானை மீதுஅமர்ந்து கையில் ஏந்தியவாறு திருக்கோயிலுக்கு கொண்டுவந்தார். நிகழ்ச்சியில் திருக்கோயில் செயல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x