Published : 16 Feb 2021 03:13 AM
Last Updated : 16 Feb 2021 03:13 AM
திருப்பத்தூரில் அமமுக பிரமுகரை மர்ம நபர்கள் நடுரோட்டில் வெட்டி கொலை செய்த சம்பவம் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் கவுதம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வானவராயன் (30). இவர், திருப்பத்தூர் மாவட்ட அமமுக மாணவரணி செயலா ளராக பொறுப்பு வகித்து வந்தார். மேலும், நிதி நிறுவனமும் நடத்தி வந்தார்.
இந்நிலையில், வானவராயன் நேற்று பூங்காவனத்தம்மன் கோயில் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டி ருந்தார். அப்போது, 6 பேர் கொண்ட கும்பல் வானவராயனை வழிமடக்கி அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜய குமார், நகர காவல் ஆய்வாளர் பேபி மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர். வானவராயன் உடலை காவல் துறையினர் மீட்க முயன்றபோது, அவரது குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வானவராயனுக்கும், கவுதம் பேட்டை பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் சங்கர் (58) என்பவருக்கும் தொழில் ரீதியாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனிடையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக அவரது குடும்பத்தார் குற்றஞ்சாட்டினர்.
மேலும், கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் எனக் கூறினர். எஸ்பி. டாக்டர்.விஜயகுமார் அவர்களை சமாதானம் செய்து, விரைவில் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.
இதைனையேற்ற வானவராயன் குடும்பத்தார் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பிறகு உடலை கைப்பற்றிய நகர காவல் துறையினர் பிரேதப் பரிசோ தனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT