Published : 15 Feb 2021 03:12 AM
Last Updated : 15 Feb 2021 03:12 AM

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்தக் கோரிக்கை

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில், மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் பேசினார். படம்: எஸ்.குரு பிரசாத்.

சேலம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்று சேலம் மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சேலம் மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்க பொதுக்குழுக் கூட்டம் சேலம் மரவனேரி  காஞ்சி காமகோடி சங்கர மடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெம்பகலஷ்மி வரவேற்றார். மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன், மாநில மூத்த ஆலோசகர் ராமன், மாநில துணை பொதுச்செயலாளர் சாய்ராம் உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் ஜெகந்நாதன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியின்போது, திருமண உதவித் தொகை, கல்வி உதவித் தொகை போன்றவை வழங்கப்பட்டன. மாவட்ட தலைவர் நிவாஸன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்டவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டினை, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் பிராமண சமூகத்தை அவதூறாக சித்தரித்து வரும் செய்திகளை உடனடியாக நீக்கவும், தொடர்ந்து வெளியிடும் அமைப்புகளை தடை செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில தேர்வாணையம் நடத்தும் அனைத்து நுழைவுத் தேர்வுகளிலும், மற்ற பிரிவினருக்கு உள்ளது போல அதிகபட்ச உச்ச வரம்பை தளர்த்தி, சலுகைகள் வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x