Published : 15 Feb 2021 03:13 AM
Last Updated : 15 Feb 2021 03:13 AM
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 81 வாகனங்கள் 16-ம் தேதி (நாளை) ஏலம் விடப்படும் என கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் இரு சக்கர வாகனங்கள், கார்கள் உட்பட 81 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும், தி.மலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 16-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.
ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள், 15-ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவு கட்டணமாக ரூ.100 மற்றும் முன் பணமாக ரூ.ஆயிரம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஏலம் எடுக்கப்பட்ட வாகனத் துக்கு, ஏலத் தொகை மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை உடனே செலுத்த வேண்டும். ஏலம் எடுத்த வாகனங்களை, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மறுபதிவு செய்ய முடியாது. ஏலம் எடுத்தபோது வழங்கப்படும் சான்றுதான், வாகனத்தின் உரிமை ஆவணமாகும்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT