Published : 14 Feb 2021 03:19 AM
Last Updated : 14 Feb 2021 03:19 AM

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2.31 கோடி கடன் உதவி

விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் பெண் ஒருவருக்கு கடனுதவிக்கான காசோலையை வழங்கிய ஆட்சியர் இரா.கண்ணன்.

விருதுநகர்: விருதுநகரில் வங்கியாளர்களுக்கான புரிந்துணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் சுய உதவிக் குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.2.31 கோடி கடனுதவிகளை ஆட்சியர் வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் குருநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சண்முகவேல், மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு வங்கி) ராஜா சுரேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x