Published : 13 Feb 2021 03:11 AM
Last Updated : 13 Feb 2021 03:11 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தொடக்கம் முதற்கட்ட ஆய்வுகளை முடிக்க ஆட்சியர்கள் உத்தரவு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்டோர். அடுத்த படம்: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடு தொடர்பான கூட்டத்தில் பேசும் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ். அருகில், டிஆர்ஓ ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர்.

வேலூர்/ராணிப்பேட்டை

வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள் ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஆட்சியர் சண்முக சுந்தரம் பேசும்போது, ‘‘வாக்குப் பதிவு நாளன்று என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களை தன்னார்வலர்களாக ஈடுபடுத்த தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு போதுமான சக்கர நாற்காலிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தண்ணீர் இல்லாத ஏரிகளில் அரசியல் கட்சிகளின் பிரச்சார பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்திய முகக்கவசம், கையுறை உள்ளிட்டவற்றை தனியாக சேகரிக்க குப்பைத் தொட்டி வைக்க வேண்டும். கிராமப்புறங்களில் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை அதிகம் செய்ய வேண்டும். கரோனா பரவலை கட்டுப்படுத்த வாக்காளர்விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மனித சங்கிலி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம். வாக்குப்பதிவு நடைபெறும் பள்ளிகளில் கழிப் பறை உள்ளிட்டவற்றை தூய்மை யாக வைத்திருக்க வேண்டும். மலைகிராம வாக்குச்சாவடிகளில் தொலைதொடர்புக்காக வாக்கி டாக்கியை பயன்படுத்தலாம். வாக் களிக்க அச்சம் உள்ள பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தல் முன்னேற்பாடு கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் இளம் பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சி யர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசும்போது, ‘‘வாக்குச்சாவடி களில் அடிப்படை வசதிகள் இருப்பதை 100 சதவீதம் தணிக்கை செய்ய வேண்டும். அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளுக் கான வாக்கு எண்ணும் மையமாக ராணிப்பேட்டைபொறியியல் கல்லூரி தேர்வுசெய்யப்பட்டுள்ளது. தொகுதிவாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை வைப்பதற்காக பாதுகாப்பு வைப்பறைக்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு அலுவலர் களுக்கு பயிற்சி அளிப்பதற்கான இடத்தையும் தேர்வு செய்ய வேண்டும். கரோனா பரவல் தொற்று பரவலை கட்டுப்படுத்த வும் வாக்குப்பதிவு முடிந்ததும் மருத்துவ கழிவுகளை அகற்ற முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x