Published : 11 Feb 2021 03:14 AM
Last Updated : 11 Feb 2021 03:14 AM
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை மீன்வள பட்டப்படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ப.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். பேராசிரியர்கள் ப.கிறிஸ்சோலைட் இரா.சாந்தகுமார், மீன்வளர்ப்பு துறைத் தலைவர் சா.ஆதித்தன், உடற்கல்வி இயக்குநர் த.நடராஜன் ஆகியோர் பேசினர்.
நாட்டு நலப்பணித் திட்டஒருங்கிணைப்பாளர் மு.முருகானந்தம், உதவி நூலகர் ரா.ஏழில்ராணி, மற்றும் மாணவர்களுடைய பெற்றோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT