Published : 08 Feb 2021 03:11 AM
Last Updated : 08 Feb 2021 03:11 AM
தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே வைக் கப்பட்ட பேனர்களை காவல் துறையினர் அவசர, அவசரமாக நேற்று அகற்றினர். ஆளும் கட்சியினர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே பேனர்கள் அகற்றப்பட்டதாக அமமுகவினர் குற்றஞ்சாட்டினர்.
தண்டனை காலம் முடிந்து பெங்களூரு வில் தங்கியுள்ள சசிகலா இன்று ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டம் வழியாக சென்னை செல்லவுள்ளார். இதை கொண்டாடும் வகையில், அமமுக வினர் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே டிஜிட்டல் பேனர்கள், சுவரொட்டிகளை வைத்துள்ளனர்.
இது ஒரு புறமிருக்க தமிழக முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்துக்காக நாளை (9-ம் தேதி) ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்துக்கு வர உள்ளார். 10-ம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய வுள்ளார். இதையொட்டி அதிமுகவி னரும் பல்வேறு இடங்களில் பேனர் கள், கட்-அவுட்டுகள் வைத்துள் ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம் பள்ளியில் தொடங்கி ராணிப் பேட்டை மாவட்டம் காவேரிப்பாக் கம் வரை தேசிய நெடுஞ் சாலை யோரங்களில் அதிமுகவினரும், அமமுகவினரும் போட்டி போட்டு டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ள னர். சசிகலா வருகை ஒருபுறம், முதல்வரின் தேர்தல் பிரச்சாரம் மறுபுறம் என ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமே களை கட்ட தொடங்கியது.
இதற்கிடையே, முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் செய்யும் இடங்களை தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், சோளிங் கர், ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் இடம், முதல் வர் வந்து செல்லும் வழித்தடங்களை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.
அதன்பிறகு, வேலூர் மாவட்டம் இறைவன்காடு, கே.வி.குப்பம், காட்பாடி, வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே நாளை இரவு நடைபெறவுள்ள பொதுக்கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அமைச்சர் கே.சி.வீரமணி ஆய்வு நடத்த சென்ற பாதைகளில் எல்லாம் அதிமுகவுக்கு இணையாக அமமுக வினரும் பல்வேறு கோணங்களில், பிரம்மாண்டமாக பேனர் களை வைத்ததை அதிமுகவினர் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர்.
வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்துக் கான ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனையை நடத்திவிட்டு அமைச்சர் கே.சி.வீரமணி திருப்பத் தூர் மாவட்டத்துக்கு புறப்பட்டார்.
அதன்பிறகு, சிறிது நேரத்தில் வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த அமமுக பேனர்களை காவல் துறையினர் அவசர, அவசரமாக அகற்றினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை களில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப் பட்டன.
வேலூர் கிரீன்சர்க்கிள், சத்துவாச் சாரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த பேனர்களும் அகற்றப்பட்டன. புதிதாக பேனர்களை வைக்கவும் காவல் துறையினர் அனுமதிக்க வில்லை. ராணிப்பேட்டை மாவட் டத்திலும், ராணிப்பேட்டை, வாலாஜா, காவேரிப்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்த அமமுக பேனர்கள் அவசர, அவசர மாக நேற்று மாலை அகற்றப்பட்டன. இதைக்கண்ட அமமுகவினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
ஆளும்கட்சி யினர் கொடுக்கும் அழுத்தம் காரணமாக காவல் துறையினர் அமமுகவினரின் பேனர்களை அகற்றி வருவதாகவும், இது எதிர்பார்த்த ஒன்று தான், யார் தடுத்தாலும் சசிகலாவின் மக்கள் செல் வாக்கை யாரா லும் பறிக்க முடியாது என அமமுக நிர்வாகி கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT