Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM
தை அமாவாசையை முன்னிட்டு இம்மாதம் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி யளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்- மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு பிரசித்திபெற்ற சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் மற் றும் சந்தன மகாலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளன. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களையொட்டி 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். பிப்.9-ம் தேதி பிரதோஷமும், 11-ம் தேதி தை அமாவாசை வழிபாடும் நடைபெறுகிறது. இதையொட்டி பிப்.9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல கோயில் நிர்வாகமும் வனத்துறையும் அனுமதி அளித் துள்ளன.
இந்த நாட்களில் காலை 6.30 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். இரவு நேரத்தில் மலையில் தங்குவதற்கு அனுமதியில்லை. உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தை அமாவாசையையொட்டி வில்லிபுத்தூர், ராஜபாளை யம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, மதுரை, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சதுரகிரி மலையடிவாரப் பகுதியான தாணிப்பாறை வரை 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT