Published : 07 Feb 2021 03:15 AM
Last Updated : 07 Feb 2021 03:15 AM
தஞ்சாவூர்/ நாகப்பட்டினம்/திருவாரூர்/ கரூர்/ புதுக்கோட்டை
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் நேற்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் கடந்த 2 மாதங்களாக அறவழியில் போராடி வரும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டத்தையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் அருகில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு போராட்டக்குழுவின் மாநில செயற்குழு உறுப்பினர் சாமி.நடராஜன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப் பாளர் என்.வி.கண்ணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிஐடியு, இந்திய மாணவர் சங்கம், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகி கள் கலந்துகொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீ ஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்டத்தில் சிக்கல் கடைவீதியில் தமிழ்நாடு விவசா யிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வடிவேல் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 48 பேரையும், கீழையூர் கடைவீதியில் விவசாயி கள் சங்க மாநிலத் தலைவர் சுப்ரமணியன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் விவசாயிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி கீழப்பாலத்தில் இந்திய கம்யூ னிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் வை.செல்வராஜ் தலைமையிலும், கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் கே.மாரி முத்து தலைமையிலும், திருத் துறைப்பூண்டியில் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், ஒன்றியக் குழுத் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையிலும் சாலை மறியல் நடைபெற்றது. இதேபோல, திருவாரூர், குடவாசல், நீடாமங் கலம் உட்பட மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வாழ்க விவசாயிகள் இயக்க மாவட்ட அமைப்பாளர் ராமசாமி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்ளிட்ட 23 பேரை லாலாபேட்டை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில், விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சி.சோமையா தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT