Published : 06 Feb 2021 03:18 AM
Last Updated : 06 Feb 2021 03:18 AM
“பவளப்பாறை, அலையாத்தி காடுகளை பாதுகாக்க வேண்டும்”, என, குறைதீர் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சுமார் 16 மாதங்களுக்கு பின்னர் ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தருவைகுளத்தைச் சேர்ந்த அனிட்டன், மகாராஜன், தங்கத்தாய் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் திரண்டு வந்துபங்கேற்றனர். அவர்கள் பேசும்போது,“தருவைகுளம் பகுதி மீனவர்கள்இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கஅனுமதிவழங்க வேண்டும்” என்றனர்.
மணப்பாடு கயஸ் பேசும்போது, “பாரம்பரிய மீனவர்களை பாதுகாக்க மீன்பிடி சட்டம் இயற்றப்பட்டது. அந்தசட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். அனைத்து விசைப் படகுகளையும் முறையாக பதிவு செய்த பிறகே தொழிலுக்கு அனுமதிக்க வேண்டும்” என்றார்.
புன்னக்காயலைச் சேர்ந்த அலங்காரம் பேசும்போது, “புன்னக்காயல் பகுதியில் வெள்ளத் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்” என்றார்.
பெரியதாழையைச் சேர்ந்த ஜெயசீலன்பேசும்போது, “பெரியதாழை கடல் பகுதியில் கன்னியாகுமரி மீனவர்கள் இரவு நேரங்களில் தங்கி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும்” என்றார்.
மீனவர் நலவாரியம்
விசைப்படகு தொழிலாளர் சங்கத்தைச்சேர்ந்த சுஜித் பேசும்போது, “மீன்பிடி துறைமுகத்தில் மருத்துவ உதவி மையம், ஆம்புலன்ஸ் வசதி, ஓய்வுக்கூடம், தொலைத்தொடர்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்” என்றார்.அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, “மீனவர்கள் நலவாரியத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். பவளப்பாறை, அலையாத்தி காடுகளை பாதுகாக்க வேண்டும்” என்றார்.
சோழபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் முத்துவிநாயகம் பேசும்போது; “புதிதாக விசைப்படகு வாங்கி தொழில் செய்து வருகிறேன். தருவைகுளம், திரேஸ்புரம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ஆகிய இடங்களில் எனது படகை நிறுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.
தூண்டில் வளைவு
ஆட்சியர் பேசும்போது, “பெரியதாழையில் ரூ.25 கோடியிலும், ஆலந்தழையில் ரூ.50 கோடியிலும் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது. அடுத்த வாரம் பணிகள் தொடங்கப்படும். கீழவைப்பாரில் ரூ.16 கோடி செலவில் தூண்டில் வளைவு நீட்டிப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT