Published : 06 Feb 2021 03:18 AM
Last Updated : 06 Feb 2021 03:18 AM
வேலூர்/ராணிப்பேட்டை /தி.மலை/திருப்பத்தூர்
ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக நேற்று 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,773- ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,628-ஆகவும் அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,591-ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 19,390-ஆகஉயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர் களில் 19,062 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 283 பேர் உயிரிழந்துள்ளனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT