Published : 05 Feb 2021 03:17 AM
Last Updated : 05 Feb 2021 03:17 AM
தூத்துக்குடியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர் சங்கத்தினர் 3-வது நாளாக நேற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 130 பெண்கள் உள்ளிட்ட 169 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், 4.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, வருவாய், கிராம உதவியாளர்கள், தற்காலிக செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம்வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பிப்ரவரி 2-ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் முதல் நாளில் மறியலில் ஈடுபட்டு கைதான அரசு ஊழியர் சங்கத்தினர், அன்று இரவு முதல் தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 3-ம் நாளாக நேற்று காலையும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலேயே போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில் பகல் 1 மணியளவில் அரசு ஊழியர் சங்கத்தினர்மாவட்டத்தலைவர் து.செந்தூர்ராஜன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் அம்பேத்கர் சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 130 பெண்கள் உட்பட 169 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று 3-வது நாளாக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.இதனால் அவ்வழியாக போகுவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 22 பேரை போலீஸார் கைது செய்த னர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT