Published : 04 Feb 2021 03:14 AM
Last Updated : 04 Feb 2021 03:14 AM

எஸ்ஐ பாலு குடும்பத்தினருக்கு காவல் ஆணையர் ஆறுதல்

எஸ்ஐ பாலு திருவுருவ படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோர். உடன் எஸ்பி ஜெயக்குமார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வே.பாலு (55). ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த இவர்,கடந்த 1-ம் தேதி சரக்கு வேனைமோதவிட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முருகவேல்என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாநகர காவல்ஆணையாளர் தீபக் எம். தாமோர்நேற்று காலை முடிவைத்தானேந்தலில் உள்ள பாலு வீட்டுக்கு சென்று, அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தூத்துக்குடி ஊரக துணை கண்காணிப்பாளர் பொன்னரசு, வைகுண்டம் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலெட்சுமி உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x