Published : 04 Feb 2021 03:14 AM
Last Updated : 04 Feb 2021 03:14 AM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோகஎரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.758.50 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.757 ஆகவும்,கழுகுமலையில் ரூ.765.50 ஆகவும், கயத்தாறில் ரூ.768.50 ஆகவும், எட்டயபுரத்தில் ரூ.757 ஆகவும், சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.775.50 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.758.50 ஆகவும், வைகுண்டத்தில்ரூ.759 ஆகவும், குளத்தூரில் ரூ.759.50 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.758.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டருக்கு (14.2 கிலோ) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT