Published : 04 Feb 2021 03:14 AM
Last Updated : 04 Feb 2021 03:14 AM

கரோனா தடுப்பூசி போடும் பணியின் தொடக்கமாக தி.மலை மாவட்ட ஆட்சியருக்கு முதல் கரோனா தடுப்பூசி 3 தனியார் மையங்களில் தடுப்பூசி போட அனுமதி

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய்த் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி யின் தொடக்கமாக, மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி கோவி ஷீல்ட் தடுப்பூசியை நேற்று போட்டுக்கொண்டார்.

தி.மலை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு கடந்த மாதம் 16-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தி.மலை மற்றும் செய்யாறு சுகாதார மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 14,400 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி வரப்பெற்றது. இரண்டாம் கட்டமாக திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்துக்கு மட்டும் 9 ஆயிரம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி வரப்பெற்றுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 2,500 பேர் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில், கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான இரண்டாம் கட்டமாக நகராட்சி பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் என 5,459 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு நடை பெற்றுள்ளது. இந்நிலையில், தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிஷீல்ட் தடுப்பூசியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று போட்டுக் கொண்டார்.

வருவாய்த்துறையினர் சார்பில் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 24 மையங்களில் நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் முன்களப் பணியாளர்களை பாதுகாக்க தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

அப்போது, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமால்பாபு, மருத்துவர்கள் ஷகீல் அமகது, தர் மற்றும் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் கண்ணகி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் அஜிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் உள்ள 24 மையங்களில் தினசரி 100 பேர் வீதம் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்த வர்களுக்கு தினசரி குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. தினசரி 2,500 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான மருந்துகள் கையிருப்பில் இருப்பதுடன், பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

தனியார் மையங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்த அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மலை ஆர்.எம்.ஆர் மருத்துவமனை, விக்னேஷ் செவிலியர் கல்லூரி, அல் அமீன் செவிலியர் கல்லூரி என மூன்று மையங்களில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x