Published : 03 Feb 2021 03:16 AM
Last Updated : 03 Feb 2021 03:16 AM

ராமநாதபுரத்தில் ரூ.6.70 லட்சம் மதிப்புள்ள நிலம் முறைகேடு

ராமநாதபுரம்

ராமநாதபுரம் கிருஷ்ணாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த முருகானந்தம் மகன் தாமரைச்செல்வம் (40). இவரது தாத்தா சிவன்தனக்குச் சொந்தமான சக்கரக்கோட்டை பகுதியில் உள்ள 1000 சதுர அடி வீட்டுமனைநிலத்தை பாகப்பிரிவினை மூலம் தனது மகன் முருகானந்தத்துக்கு அளித்துள்ளார்.

இந்த நிலத்தை முருகானந்தம், தனது நண்பரான ராமநாதபுரம் வெளிப்பட்டணத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கு வெளிப்பட்டணம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2001-ல் பவர் எழுதிக் கொடுத்துள்ளார். இந்நிலையில், முருகானந்தம் 27.1.2010-ல் இறந்துவிட்டார். அதன்பின், பவர் அளித்த நிலத்தை, திருஉத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கையைச் சேர்ந்த நாகராஜன் என்பவருக்கு பஞ்சவர்ணம் கிரயமாகக் கொடுத்தது போல போலி ஆவணம் தயாரித்ததுடன், திரும்பவும் நாகராஜனிடமி ருந்து பஞ்சவர்ணம் கடந்த 2011-ம் ஆண்டு கிரயம் பெற்றுள்ளார்.

அத்துடன் நிலத்தை ராமநாதபுரம் பாம்பூரணியைச் சேர்ந்த காதர்முகைதீன் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். தாமரைச்செல்வம் புகாரின்பேரில் ரூ.6.70 லட்சம் மதிப்புள்ள 1000 சதுர அடி வீட்டுமனை நிலத்தை பஞ்சவர்ணம்,நாகராஜன், காதர் முகைதீன் ஆகியோர் முறைகேடு செய்ததாக வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x