Published : 03 Feb 2021 03:17 AM
Last Updated : 03 Feb 2021 03:17 AM
தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவர் ஜி.பி.ஜோ பிரகாஷ் அறிக்கை: மத்திய அரசின் 2021-2022-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தொழில் மற்றும் வர்த்தக துறை மேம்பாட்டுக்கு ரூ.27,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
இதன்மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். சிறு, குறு, நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், புதிய தொழில் முனைவோருக்கு மானியத்துடன் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது.
புதிதாக 100 சைனிக் பள்ளிகள்தொடங்குதல், 15 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்தப்படுவதும் வரவேற்கத்தக்கது. விவசாயிகளுக்கு ரூ.16.5 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு, 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமானவரி விலக்கு, சந்தைகளில் இருந்து ரூ.12 லட்சம் கோடி கடன் பெற திட்டம், தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா நிறுவனம், கடல் பாசியை பதப்படுத்த புதிய திட்டம்,100 விமான நிலையங்கள் அமைப்பது, மும்பை முதல் கன்னியாகுமரி வரை புதிய தொழில் வழித்தடம் அமைப்பது என சிறப்பான பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
சிஐஐ கருத்து
துணைத் தலைவர் மைக்கேல் மோத்தா கூறும்போது, “உள்கட்டமைப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்” என்றார்.
துடிசியா வரவேற்பு
தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்க (துடிசியா) தலைவர் கே.நேரு பிரகாஷ் அறிக்கை: குறு, சிறு தொழில்களின் வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு, குறு, சிறு தொழில் கடன் மற்றும் மானியத்துக்காக ரூ.15,700 கோடி அறிவித்தது மற்றும் சிறு நிறுவனங்களுக்கான மூலதன உச்ச வரம்பை ரூ.2 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்த்தியது போன்ற திட்டங்களை துடிசியா வரவேற்கிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT