Published : 02 Feb 2021 03:18 AM
Last Updated : 02 Feb 2021 03:18 AM
மத்திய பட்ஜெட் குறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த 2021-22 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையானது ஏமாற் றமும் அதிர்ச்சியும் அளிக்கிறது. விவசாயிகளுக்கு அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத் துவதற்கு எந்த ஒரு திட்டத்தையும் அறிவித்ததாக தெரியவில்லை.
2013-ம் ஆண்டை ஒப்பிட்டு, தற்போது நெல்லுக்கான விலையை இரட்டிப்பாக்கி உள்ளோம் என்று தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்வது பிரச்சினையை திசை திருப்பும் நடவடிக்கை. 2013-ம் ஆண்டு ஒரு மூட்டை டிஏபி உரம் ரூ.375-க்கு விற்பனை செய்யப் பட்டது. ஆனால், இன்று அந்த உரம் ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இடுபொருட் களின் விலை பலமடங்கு உயர்ந் துள்ள நிலையில், நெல்லுக்கு அதிக விலையை கொடுக்கிறோம் என்பது மோசடி அறிவிப்பாகும்.
3 புதிய வேளாண் சட்டங்களை யும் திரும்ப பெறுவதற்கான அறிவிப்புகள் இடம்பெறவில்லை. குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வது நடப்பாண்டு தொடரும் என்று அறிவித்திருப்பது சந்தேகமளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு விரும்பினால்தான் கொள்முதல் செய்ய முடியும் என்கிற நிலையை புதிய சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது.
வேளாண் சட்டங்கள் விவசா யிகளின் போராட்டங்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டங்களில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
குறிப்பாக தாங்கள் விரும் பும் நிறுவனங்களிடம் மின்சார இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பின் மூலம், விவசாயத்துக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிய முடிகின்றது. இதை வன்மையாக கண்டிக்கி றோம். தமிழக அரசு இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். மின்சார துறையை மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT