Published : 31 Jan 2021 03:14 AM
Last Updated : 31 Jan 2021 03:14 AM

செங்கல்பட்டில் அரசு சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 1,360 பேருக்கு பணி ஆணை

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஆட்சியர் ஜான்லூயிஸ் பணி நியமன ஆணையை வழங்கினார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டில் அரசு சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில்1,360 பேருக்கு வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்திய தனியார் நிறுவனங்கள் பங்குபெற்ற வேலைவாய்ப்பு முகாம், ஆட்சியர் ஜான்லூயிஸ் தலைமையில் செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

இதில் 176 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. வேலைவாய்ப்பு வேண்டி 5,000 நபர்கள் பதிவு செய்திருந்தனர். இம்முகாமில் 1,360 நபர்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் வழங்கினார். முதல்நிலை நேர்காணல் முடிவுற்று இறுதி நேர்காணல் தேர்வுக்கு 2,435 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும்இந்த வேலைவாய்ப்பு முகாமை தங்கள் பகுதியில் தேடி வந்து நடத்திய தமிழக அரசுக்கு இளைஞர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இதுவரை ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 90 சிறிய மற்றும் 7 பெரிய வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இம்முகாமின் மூலம் 7,640 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத் தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் னிவாசராவ், இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரிமுதல்வர் சிதம்பரவிநாயகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலர் அருணகிரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x