Published : 31 Jan 2021 03:14 AM
Last Updated : 31 Jan 2021 03:14 AM

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 53-வது நாளாக போராட்டம்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு போராட்ட களத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

கடலூர்

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 53-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர் கள், அரசு மருத்துவக் கல்லூரி யில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் வசூலிக்க வலியுறுத்தி நேற்றுடன் 53-வது நாளாக பல்வேறு போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் கல்லூரி விடுதியில் மின்சாரம், குடிநீர், உணவு எனஅனைத்தையும் தடை செய்துள் ளது. மாணவர்கள் போராட்ட களத்திலேயே உணவருந்தி போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மாணவர்களுக்கு ஆதரவுதெரிவித்துள்ளது. திமுக இளைஞரணி தலைவர் உதய நிதி ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலை வர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினர். புவனகிரி திமுக எம்எல்ஏ சரவணன், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த 27-ம் தேதி தமிழக முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச் சர் உள்ளிட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கோரிக்கை மனு அனுப்பும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு, உயர்கல்வி நிர்வாகத்தின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத் துறை நிர்வாகத்துக்கு மாற்றி அரசாணை வெளியிட்டது.

இதுதொடர்பாக மாணவர்கள் கூறுகையில், “உயர்கல்வித் துறையில் இருந்து சுகாதாரத் துறைக்கு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை மாற்றி அரசாணை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி. ஆனாலும் கல்விக் கட்டணம் குறித்து அரசாணை வரும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றனர். மாணவர்கள் போராட்ட களத்திலேயே வகுப்புகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி நிர்வாகத்தை மாற்றி அரசாணை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி. ஆனாலும் கல்விக் கட்டணம் குறித்து அரசாணை வரும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x