Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM
என்எல்சி தொழிற்சங்கங்களுக் கான வாக்கெடுப்பு தேர்தலில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.
ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் அதன் சிறப்புத் தலைவர் எம்.சேகர் தலைமையில் சென்னையில் மத்திய துணை முதன்மை தொழிலாளர் ஆணை யரும், தொழிற்சங்கங்களுக்கான வாக்கெடுப்பு நடத்தும் அலுவ லருமான முத்துபாண்டியனை சந்தித்து நேற்று முன்தினம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பது:
என்எல்சி தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேசி தீர்க்கஅங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங் கத்தை தேர்வு செய்வதற்காக, தொழிற்சங்கங்களுக்கான வாக்கெடுப்பு தேர்தல் நடத்தி தேர்வுசெய்யும் முறை கடந்த 16 வருடங்களாக உள்ளது. தற்போது அங்கீ கரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களான சிஐடியு, தொமுச ஆகியவற்றின் காலக் கெடு முடிவுற்று, தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் நிரந்தர தொழிலாளர்கள் மட்டும் தான் வாக்களிக்க முடியும். ஒப்பந்த தொழிலாளர்கள் வாக்களிக்க இயலாது.
ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகள் விவாதத்திற்கு வரும் போது, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளே நிர்வாகத்துடனான பேச்சு வார்த்தை யில் பங்கெடுக்கின்றனர். ஆனால் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்கங்களுக்கான வாக்கெடுப்பு தேர்தலில் வாக்களிக் கும் உரிமை மட்டும் மறுக்கப்படுவது நியாயமற்ற நட வடிக்கையாகும்.
நடைபெற உள்ள தொழிற்சங்கங்களுக்கான வாக்கெடுப்பு தேர்தலில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை தேர்தல் நடத்தும் அலுவலர் அளிக்கவேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இம்மனு நகல் மத்திய முதன்மை தொழிலாளர் ஆணையர், மத்தியதொழிலாளர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சக செயலா ளருக்கும், என்எல்சி தலைவர் மற்றும் மனிதவளத்துறை இயக் குநர், கடலூர் ஆட்சியருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT