Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

தை பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வத்ராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி மலை அமைந்துள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய கோயில்களில் மாதம்தோறும் அமாவாசை 4 நாட்கள், பவுர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிரதோஷம் மற்றும் தை மாதப் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 26-ம் தேதி முதல் இன்று (ஜன.29) வரை 4 நாட்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

தை மாதப் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் சென்று சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x