Published : 28 Jan 2021 07:18 AM
Last Updated : 28 Jan 2021 07:18 AM

இலங்கைக்கு கடத்த முயற்சி 4.32 டன் மஞ்சள் பறிமுதல்: தூத்துக்குடியில் 4 பேர் கைது

தூத்துக்குடி

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 4.32 டன் மஞ்சள்மற்றும் மஞ்சள் பவுடர் உள்ளிட்டபொருட்கள் சிக்கின. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் மஞ்சள், மஞ்சள் பவுடர், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் இந்தியாவை விட பலமடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால், இந்த பொருட்களை இலங்கைக்கு கடத்தினால் பெருமளவு பணம்கிடைக்கும் எனசிலர் வரி ஏய்ப்பு செய்து,தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், கடந்த சில மாதங்களாக விரளி மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தமுயற்சிப்பதும், அதனை காவல்துறை தடுப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி, ராமேசுவரம் கடலோர பகுதிகளில் கடலோர காவல்படை போலீஸார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி, முள்ளக்காடு, கோவளம் கடற்கரையிலிருந்து மஞ்சள்,ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

கியூ பிரிவு காவல் ஆய்வாளர்விஜய்அனிதா, உதவி ஆய்வாளர்ஜியோமணி தங்கராஜ் மற்றும் போலீஸார் கோவளம் கடற்கரையில் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, 8 பேர் கும்பல்லாரியிலிருந்து விரளி மஞ்சள்,ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய மூட்டைகளை, கோவளம் கடலில்நிறுத்தப்பட்டிருந்த படகில் ஏற்ற முயன்றனர். அவர்களை கியூ பிரிவு போலீஸார் சுற்றி வளைத்தனர். இதில் 4 பேர் சிக்கினர். 4 பேர் தப்பியோடி விட்டனர்.

விசாரணையில், தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகணேசன் (50),சாயர்புரம், அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெபமணி (38), அதேஊர் காமராஜ் நகர் 1-வது தெருவைச்சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அரிச்சந்திரன் (20), ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, நாடார் மேலத் தெருவைச் சேர்ந்தசுப்பிரமணியன் (60) என்பது தெரியவந்தது. அவர்களை கியூ பிரிவு போலீஸார் முத்தையாபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து 2.82 டன்விரளி மஞ்சள், 1.5 டன் மஞ்சள் பவுடர்,125 கிலோ ஏலக்காய் மற்றும்135 பெட்டிகள் சிகரெட் பேப்பர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். மேலும்,அவர்கள் பயன்படுத்திய லாரியும் கைப்பற்றப்பட்டது. தப்பியோடிய தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் செல்வம், அஜித், வசந்த் ஆகியோரை, கியூ பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x