Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM

குடியரசு தின விழாவில் ரூ.2.17 கோடியில் நலத்திட்ட உதவிகள் தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

தி.மலையில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி. அருகில், எஸ்பி அரவிந்த் உள்ளிட்டோர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் 484 பேருக்கு ரூ.2.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது. தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், சமாதானத்தை வலியுறுத் தும் வகையில் வெண் புறாக்கள்மற்றும் வண்ண பலூன்களை பறக்க விட்டார்.

இதையடுத்து, காவல்துறையி னரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், 47 தலைமை காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கங் கள் மற்றும் சான்றிதழ்களை வழங் கினார். மேலும், வருவாய்த் துறை,பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, முன்னாள் படைவீரர் நலத் துறை, மகளிர் திட்டம், தோட்டக் கலைத் துறை, தொழிலாளர் துறை, வேளாண்மை பொறியியல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் 484 பேருக்கு ரூ.2.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அவர், பல்வேறு துறைகளில் சிறப்பாகபணியாற்றிய 191 அரசு அலுவலர் கள், ஊழியர்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனித் திறமையாளர்களுக்கு பரிசு, கேடயம் மற்றும் பாராட்டு சான்றி தழ்களை வழங்கினார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். கரோனா பரவல் உள்ளதாக கூறி,பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x