Published : 25 Jan 2021 03:16 AM
Last Updated : 25 Jan 2021 03:16 AM
நாமக்கல்லில் ஆரா புதிய நவீன கண் மருத்துவமனை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
நாமக்கல் சேலம் சாலை முருகன் கோயில் எதிரில் ஆரா புதிய சிறப்பு கண் மருத்துவமனை நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மூத்த மருத்துவர்கள் நரேந்திரன் மற்றும் கல்பனா நரேந்திரன் ஆகியோர் தலைமை வகித்து மருத்துவமனையை திறந்து வைத்தனர்.
கூடைப்பந்து வீரர் கோகிலா சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மருத்துவமனையில் நவீன கண் புரை (கேட்ராக்ட்) லேசர் சிகிச்சை, மாறு கண் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் கண் சிகிச்சைக்கென தனி தளம், நவீன ஆப்டிகல்ஸ் ஷோரூம் மற்றும் குழந்தைகளுக்கான ஆப்டிகல்ஸ் பிரிவு, விழித்திரை ஸ்கேன் மற்றும் சிகிச்சைப் பிரிவு, குளுக்கோமா ஸ்கேன், எச்எப்ஏ மற்றும் சிகிச்சை பிரிவு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர், மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் சசிகலாதேவி, நிவி ஸ்கேன் டாக்டர் ராகுல், டாக்டர் ரேவதி, நளா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சுரேஷ் குமார், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் செ. காந்திச்செல்வன், என்இசிசி நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் பி. செல்வராஜ், டாக்டர் குழந்தைவேல், ரெங்கநாதன், கே.கே.பி. நல்லதம்பி, சின்னு சாமி, டாக்டர்கள் விஷ்ணுராம், சிவலிங்கம், சதர்ன் டிரான்ஸ்போர்ட் தயாளன், மாவட்ட கூடைப்பந்து சங்க தலைவர் நடராஜ், கணேசா டிரான்ஸ்போர்ட் பரத், நாமக்கல் மேனேஜ்மென்ட் அசோசியேசன் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்த கொண்டனர்.
மூத்த கண் மருத்துவ கன்சல்டன்ட் மருத்துவர் குமணபூபதி, குளுக்கோமா மற்றும் ரெட்டினா சிறப்பு மருத்துவர் மிதுன் ஆதித், குழந்தைகள் கண் மற்றும் மாறு கண் சிகிச்சைப்பிரிவு சிறப்பு மருத்துவர் சிந்து பார்கவி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT