Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM
கர்ப்பிணிகள், அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோர் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு்ளளது.
இது குறித்து கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட 108 ஆம்பு லன்ஸ் சேவையின் மாவட்ட அதிகாரி ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
108 ஆம்புலன்ஸ்கள், தருமபுரியில் 25, கிருஷ்ணகிரியில் 28 இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டில் கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் தருமபுரியில் 2979 பேரும், கிருஷ்ணகிரியில் 5482 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையிலும், கரோனா சிறப்பு வார்டுகளிலும் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதேபோல் கர்ப்பிணி பெண்கள் தருமபுரியில் 9330 பேரும், கிருஷ்ணகிரியில் 13959 பேரும் அழைத்து வரப்பட்டனர். விபத்தில் சிக்கியவர்களைப் பொறுத்தவரை தருமபுரியில் 4408 பேர், கிருஷ்ணகிரியில் 6311 பேர் என 10 ஆயிரத்து 719 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.ஆம்புலன்ஸில் அழைத்து வரும்போது, தருமபுரியில் 35 தாய்மார்களுக்கும், கிருஷ்ணகிரியில் 140 பேருக்கும் பிரசவம் நடந்துள்ளது. ஆம்புலன்ஸ மூலம் அழைத்து வரப்பட்ட 175 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நடந்துள்ளது.
கடந்த ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 36 ஆயிரத்து 689 அழைப்புகளும், தருமபுரி மாவட்டத்தில் 28 ஆயிரத்து 718 அழைப்புகளும் பெறப்பட்டு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நிகழ் விடங்களுக்குச் சென்றுள்ளனர்.
கர்ப்பிணிப்பெண்களும், அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT