Published : 23 Jan 2021 03:16 AM
Last Updated : 23 Jan 2021 03:16 AM
இளையான்குடியில் 40 கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால், வைகையில் இருந்து தண்ணீரைத் திறக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் விவரம்:
விவசாயிகள் வீரபாண்டி, சந்திரன்: மழையால் பாதிக்கப் பட்ட நெற்பயிர், மிளகாய் பயிர் களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30 ஆயிரம், வெங்காயத்துக்கு ரூ.70 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆட்சியர்: சிவகங்கை மாவட் டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் நெற் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. நன் செய் நிலமாக இருந்தால் ஏக்க ருக்கு ரூ.8 ஆயிரம், புன்செய் நிலமாக இருந்தால் ரூ. 4 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதுவரை 7,869 விவசாயிகளுக்கு ரூ.4.48 கோடி நிவாரணமாக, அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் ஆதிமூலம், அய்யாச்சாமி: பயிர் கடனை தள்ளுபடி செய்யும் தீர்மானத்தை இக்கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும். இளையான்குடி பகுதியில் 40 கண்மாய்கள் நிரம்பாமல் உள்ளன. வைகை அணையில் சிவகங்கை மாவட்டத்துக்குரிய தண்ணீரைத் திறக்க வேண்டும்.
ஆட்சியர்: அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
விவசாயி கோவிந்தராஜன்: உப்பாற்றில் தண்ணீர் செல்லும் கால்வாயைச் சீரமைக்காததால் செய்களத்தூர் கண்மாய்க்குத் தண்ணீர் வரவில்லை.
ஆட்சியர்: பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பர்.
பரம்புமலை போராட்டக் குழு தலைவர் கர்ணன்: பிரான் மலையில் கல் குவாரிக்குத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT