Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் செல்வி அறிவுரை

வேலூர்மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டிலும்

சிறந்து விளங்க வேண்டும் என வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் செல்வி தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசு, உதவி பெறும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடப்பாண்டுக் கான வகுப்புகள் நேற்று தொடங் கின.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற முதலாமாண்டு வகுப்பு தொடக்க நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் செல்வி தலைமை வகித்தார். இதில், கலந்தாய்வு மூலம் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை நேற்று நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நடந்த, முதலாமாண்டு மாணவர் வர வேற்பு நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி பேசும்போது, "வேலூர் அரசு மருத் துவக் கல்லூரியில் நடப்பாண்டில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கைமூலம் 100 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதில், அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக் கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் 7 மாணவர்கள் சேர்ந்துள் ளனர். புதிதாக வந்துள்ள மாணவர் கள் கரோனா குறித்த முன்னெச் சரிக்கையுடனும், முகக்கவசம், சமூக இடைவெளி, கவனமுடன் கல்வியை தொடர வேண்டும்.

மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், தேவைகள் குறித்து பேராசிரியர்களிடம் தயங்காமல் கேட்கலாம். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் நன்றாக படிக்கின்றனரா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

எங்களது கடமை மருத்துவ மாணவர்களை எதிர்காலத்தில் திறமையான மருத்துவர்களாக உருவாக்கித் தருவதாகும். பெற்றோர்கள் தங்களது பிள்ளை களின் கல்வி குறித்து அந்தந்த துறையிலும் கேட்டு தெரிந்து கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும்.

அதேபோல, மாணவர்களும் கல்வியுடன் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும். மூத்த மாணவர்களுடன் சகோதர மனப்பான்மையுடன் பழக வேண்டும். இக்கல்லூரியில் ராஃகிங் முறை தடை செய்யப்பட்டுள்ளது. தவிர, ராஃகிங் நிகழாத வகையில் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மாணவர்கள் முழு நேரமும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியில், முதலாமாண்டு மாணவர்களுக்கு, மூத்த மாணவர்கள் மலர் கொடுத்து வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜவேலு, துணை முதல்வர் முகமதுகனி, குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், மருத்துவர் நித்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x