Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM
மதச்சார்பின்மையில் நம்பிக்கை யுள்ள கமல்ஹாசன் எங்கள் கூட்ட ணிக்கு வந்தால் வரவேற்போம் என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொள்ள, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 23-ம் தேதி திருப்பூர் வருகிறார்.
இதுதொடர்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத், தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறும் போது, "இந்த முறை கொங்கு மண்டலத்தில் ராகுல்காந்தியின் வருகைஎழுச்சிகரமானதாக இருக்கும். கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கொள்ளப்பட்ட பரப்புரையைவிட 5 மடங்கு அதிக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். பொதுமக்களை சந்திக்க வரும் அவர், கோவையில் தொழில்துறையினருடனும், திருப்பூரில் தொழிலாளர்களோடும் கலந்துரையாடுகிறார். தேர்தல் உடன்பாடு குறித்து உரிய நேரத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்திப்பார்.
நடிகர் ரஜினிகாந்தை காங்கிரஸுக்கு அழைத்தோம். ஆனால், பாஜகவின் அழுத்தம் அவரைரத்த அழுத்தம் வரை கொண்டு சென்றுவிட்டது. ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் காங்கிரஸுக்கு உண்டு. திமுக கூட்டணியோடு எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை. மதச்சார் பின்மையில் நம்பிக்கையுள்ளவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவரை வரவேற்போம். புதுச்சேரியில் எத்தகைய அரசியல் சூழல் நிகழ்ந்தாலும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். அங்கு நண்பர்களுடன் இணக்க மாக இருக்கவே விரும்புகிறோம். தனியாக நிற்கவும் தயாராக இருக்கிறோம். அனைத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் பிரதமர், கரோனா தடுப்பூசி விவகாரத்தில் பின்னிலைக்கு வந்து விட்டார். அமெரிக்காவில் அதிபராகதேர்வு செய்யப்பட்டுள்ள ஜோபைடன், தடுப்பூசியை தனக்கு முதலில் போட்டுக்கொண்டார்.இதேபோல, நமது பிரதமரும் போட்டிருந்தால் சந்தேகத்துக்கு இடம் இருந்திருக்காது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT