Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டத்தில் நவீன மறு நில அளவைக் கருவிகளைக் கொண்டு நிலங்கள் அளவீடு செய்யப்படுகின்றன.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நவீன மறு நில அளவைக் கருவிகளான வகையூட்டு பூகோள நிலைக்கலன் கருவிகளை கொண்டு, சூளகிரி வட்டத்தில் உள்ள அனைத்து புலங்களின் முச்சந்திகள் மற்றும் புறம்போக்கு நிலங்களை அளவை செய்யும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
அதன்படி, கிராம எல்லைக்குள் பதிவு பெற்ற நில உரிமைதாரர்கள் அல்லது நிலங்களின் மீது பற்றுள்ளவர்கள் எனக் கூறிக் கொள்ளும் ஒவ்வொருவரும், தங்களுக்கு சொந்தமான எல்லைகளைக் காட்டும் பொருட்டு உடனிருந்து உரிமை கொண்டாடும் நிலங்களின் எல்லைகளை காட்டவும், நில அளவைக்கு தேவைப்படும் விவரங்களை வழங்கவும் வேண்டும்.
நில அளவைப் பணிகளை நில அளவை அலுவலரின் நேர் விசாரணையின் கீழ் நில அளவை தொடர்பான அனைத்து மனுக்களும், ஆய்வாளரின் நவீன மறு நில அளவை திட்ட அலுவலகம், (அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில்) சூளகிரி என்கிற முகவரிக்கு வழங்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT