Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM

சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

திருப்பூர்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை சார்பில் 32-வது சாலை பாதுகாப்பு மாத விழா, ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன் தொடக்கமாக, திருப்பூர் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிவதன் அவசியம், நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு, அவிநாசி சாலை குமார் நகர் பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே நடைபெற்றது. துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வழங்கினார். அதோடு, போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றிய வாகன ஓட்டிகளுக்கு ரோஜா மலர்களையும் வழங்கினார். நிகழ்வின்போது, மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் குமார், செந்தில்குமார், வெங்கட்ரமணி மற்றும் காவல், போக்குவரத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x