Published : 17 Jan 2021 03:15 AM
Last Updated : 17 Jan 2021 03:15 AM

கடலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட 10,400 பேர் பதிவு திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியர் தகவல்

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தொடக்கி வைத்து, மருத்துவ முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை பார்வையிட்டார்.

கடலூர்

கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்டஆட்சியர் சந்திரசேகர் சாகமூரிநேற்று தொடங்கி வைத்து, மருத் துவ முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை பார்வையிட் டார்.

அப்போது ஆட்சியர் கூறியது:

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 10,400 பேர் பதிவு செய்துள் ளனர். தற்போது கடலூர் மாவட்டத்திற்கு 7,800 தடுப்பூசி வரப்பெற் றுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர்அரசு தலைமை மருத்துவமனை, விருத்தாசலம் அரசு மருத்துவ மனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையாமருத்துவக் கல்லூரி மருத்துவ மனை ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு முதற்கட்டமாக இன்று (நேற்று) முதல் தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி போடப்பட்ட பின்பு, அவர்களை மருத்துவம னையிலேயே கண்காணிப்பு அறையில் 30 நிமிடங்கள் வரை வைக் கப்படுவார்கள். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் கண் காணிக்கப்படுவார்கள்.

கரோனா தடுப்பூசி தற்போதுமுதற்கட்டாக மருத்துவ பணி யாளர்களுக்கு போடப்படுகிறது. தொடர்ந்து படிப்படியாக அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது கடலூர் மாவட்டத்தில் நான்கு மையங்களிலும் நாள் ஒன் றுக்கு 100 முதல்150 நபர்கள் வரை தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இம்முகாமில் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) ரமேஷ் பாபு, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) செந்தில்குமார், கடலூர்அரசு மருத்துவமனை கண்காணிப் பாளர் சாய்லீலா மற்றும் மருத் துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x