Published : 17 Jan 2021 03:15 AM
Last Updated : 17 Jan 2021 03:15 AM

கரோனா தடுப்பூசி மருந்தை போட்டுக்கொள்ள முன்கள பணியாளர்களே ஆர்வம் காட்டவில்லை 1,200 பேரில் 175 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது

கரோனாவை தடுக்க நாடு முழுவதும் நேற்று முதல் தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியது. அதன்படி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். அருகில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உள்ளிட்டோர். அடுத்த படம்: வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தொடங்கி வைத்தார். அருகில், மருத்துவ கல்லூரி முதல்வர் செல்வி உள்ளிட்டோர். கடைசிப்படம்: ராணிப்பேட்டை மாவட்டம் புன்னை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி மருந்து போடும் முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்.

வேலூர்/திருப்பத்தூர்/ராணிப்பேட்டை/தி.மலை

கரோனா தடுப்பூசி மருந்தை போட் டுக்கொள்ள முன்கள பணியாளர் களே ஆர்வம் காட்டாததால், ஒருங் கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1,200 பேரில் நேற்று 175 பேருக்குமட்டுமே தடுப்பூசி செலுத்தப் பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

கரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வரும் முன்கள பணி யாளர்களுக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் போடும் முகாம் நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 27,200 பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 4 இடங் களிலும், திருப்பத்தூர் மாவட்டத் தில் 5 இடங்களிலும், ராணிப் பேட்டை மாவட்டத்தில் 3 இடங் களும் என மொத்தம் 12 இடங் களில் கரோனா தடுப்பூசி மருந்து கள் முன்கள பணியாளர்களுக்கு நேற்று செலுத்தப்பட்டது.

திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில் கரோனா தடுப்பூசி மருந்து போடும் முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார்.

தமிழக வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மணி வண்ணன் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவர் திலீபன் கரோனா தடுப்பூசி மருந்தை முதலில் போட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணிபேசும்போது, “ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 12 இடங் களில் கரோனா தடுப்பூசி மருந்துகள் முன்கள பணியாளர்களுக்கு முதற் கட்டமாக செலுத்தப்படுகிறது. விருப்பமுள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி மருந்து செலுத்தப்படும். திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனையில் பணியாற்றி வரும் 4,184 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இதற் கான 4,700 டோஸ் மருந்துகள் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்கள் 28 நாட்கள் கழித்து 2-ம் கட்டமாக தடுப்பூசியை போட்டுக் கொள்வது அவசியமாகும். ஒவ் வொரு மையத்திலும் 100 நபர் களுக்கு தடுப்பூசிகள் போடப்படும். தமிழக அரசு வழிகாட்டு நெறி முறைகளுடன் அடுத்து வரும் நாட்களில் பதிவு செய்தவர்களுக்கு தடுப்பூசி மருந்து போடப்படும்.

உலகளவில் மருத்துவ விஞ் ஞானிகள், தலைசிறந்த மருத் துவர்களின் பல கட்ட ஆய்வுக்குப் பிறகு கரோனா தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் 7 மையங்களில் கரோனா தடுப்பூசி மருந்துகள் முன்கள பணியாளர்களுக்கு வழங் கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிமருந்தை போட்டுக்கொள்வோர் களுக்கு பதிவுச்சான்றிதழ் வழங்கப்படும்’’ என்றார்.

வாணியம்பாடி அரசு மருத் துவமனையில் கரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் முகாமை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அரசு மருத் துவர்கள் செல்வகுமார், சுமதி, பிரபாகரன், சிவக்குமார், திருப்பதி, சிவாஜி, மணிகண்டன், சதாசிவம், சுபான், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவர் டி.டி.குமார், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல, வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் கரோனா தடுப்பூசி மருந்து செலுத்தும் முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை டீன் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டத்துக்கு உட்பட்ட புன்னை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி மருந்து போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.

முகாம்கள் வெறிச்சோடின

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் தடுப்பூசி மருந்துகள் போடும்நிகழ்ச்சி நேற்று காலை 10 மணிய ளவில் தொடங்கியது. தடுப்பூசி மருந்தை போட்டுக்கொள்ள ஏற் கெனவே முன்பதிவு செய்த முன் கள பணியாளர்கள் 85 சதவீதம் பேர் மருந்தை போட்டுக்கொள்ள முன்வரவில்லை என்பதால், 1,200 பேரில் நேற்று 175 பேருக்கு மட்டுமே தடுப்பூசி மருந்து நேற்று செலுத் தப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கரோனா தடுப்பூசி மருந்து போட்டுக் கொள்ள 1,200 பேர் தேர்வு செய்து அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.

ஆனால், என்ன காரணம் என தெரியவில்லை. நேற்று முகாம் நடைபெற்ற இடத் துக்கு முன்கள பணியாளர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை. முகாம் நடைபெற்ற இடங்கள் வெறிச்சோடியே காணப்பட்டன. நேற்று மாலை நிலவரப்படி வேலூரில் 4 இடங்களில் நடைபெற்ற முகாமில் 56 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் நடைபெற்ற முகா மில் 20 பேரும், திருப்பத்தூர் மாவட் டத்தில் 5 இடங்களில் நடைபெற்ற முகாமில் 99 பேர் என மொத்தம் 175 பேருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி நேற்று போடப்பட்டது.வரும் நாட்களில் இதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

சாமானிய மக்களை காட்டி லும் மருத்துவத் துறையில் முன் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்களே கரோனா தடுப்பூசி மருந்தை எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டாத நிலையில், சாதா ரண மக்கள் எப்படி இதை ஏற்று கொள்வார்கள் என தெரியவில்லை. எனவே, பொதுமக்களின் அச் சத்தை போக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத் துறையினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனை வரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திருவண்ணாமலை

கரோனா நோய் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசி போடும் பணி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.வி. நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று தொடங்கியது.

மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி தலைமை வகித்தார். தடுப்பூசி போடும் பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச் சந்திரன் தொடங்கி வைத்தார். நலப் பணிகள் இணை இயக்குநர் கண்ணகி, சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் அஜிதா, சங்கீதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் 99 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 அரசு மருத்துவமனைகள், தி.மலைஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் 322 தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 17,206 சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மருத்து போடப்பட உள்ளது. இதற்காக 14,400 டோஸ் வரபெற்றுள்ளது.

தி.மலை மாவட்டத்தில் 6 இடங் களில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வெப்ப பரிசோதனை செய்த பிறகு, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் அவர்கள், தனி அறையில் 30 நிமிடங்கள் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். இவர் களது விவரம் முழுவதும் ஆன்லை னில் பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளது” என தெரிவிக்கப் பட்டுள்ளது.

தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேருக்கும், செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் 13 பேருக்கும், எஸ்வி நகரம் மற்றும் காட்டாம்பூண்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலா 3 பேருக்கும், பெருங்கட்டூர் மற்றும் கீழ்பென்னாத்தூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலா 2 பேருக்கும் என மொத்தம் 27 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x