Published : 16 Jan 2021 03:15 AM
Last Updated : 16 Jan 2021 03:15 AM
சிவகங்கையில் மானிய விலை இருசக்கர வாகனம் வழங்கும் விழா, மானாமதுரை அருகே மிளகனூரில் மினி கிளினிக் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் பயனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்களை வழங்கி அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேசியதாவது: தினமும் 200 பேரைச் சந்தித்துக் குறைகளைக் கேட்கிறேன். எந்தக் குறையாக இருந்தாலும் என்னைச் சந்திக்கலாம். பொதுக்கூட்டத்தை நடத்தி ஆளும்கட்சியினர் மீது குறை சொன்னால், நாங்கள் பதில் சொல்வோம். அதைவிடுத்து கிராமசபைக் கூட்டத்தையே திமுகவினர் அசிங்கப்படுத்தி வருகின்றனர். கிராமசபைக் கூட்டம் நடத்தி மு.க.ஸ்டாலின், அவரது தந்தை சம்பாதித்த சொத்தை மக்களுக்கு வழங்கப் போகிறாரா? அவர்கள் ஆளும்கட்சியாகவே இல்லை. அப்புறம் எதற்கு கிராமசபைக் கூட்டம் நடத்துகிறார்கள் எனத் தெரியவில்லை? சிவகங்கை மாவட்டத்தில் பயிர் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பேசி, உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
விழாவில் ஆட்சியர் பி. மதுசூதன்ரெட்டி, நாகராஜன் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மகளிர் திட்ட இயக்குநர் அருள்மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT