Published : 10 Jan 2021 03:29 AM
Last Updated : 10 Jan 2021 03:29 AM

பாஜக சார்பில் கடலூரில் பொங்கல் விழா

சேத்தியாதோப்பில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பொங்கல் வைத்த கலாச்சார பிரிவு மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம்.

கடலூர்

கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நேற்று கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நம்ம ஊரு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து பாஜக மகளிரணியினர் மண் பானைகளில் பொங்கல் வைத்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம், “விவசாயிகளின் வளர்ச்சிக்காக பிரதமர் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

ஆண்டுதோறும் கிசான் நிதிஉதவி திட்டம் மூலம் ரூ 6 ஆயிரம் வழங்கி வருகிறார். கரோனா காலத்திலும் விவசாயிகளின் முன் னேற்றத்திற்காக மத்திய அரசு ரூ.96 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனால் இந்த பொங்கல் விவசாயிகளுக்கு நல்ல தொரு, மகிழ்ச்சியான பொங்கல் பண்டிகையாக அமையும். தமிழ்கடவுள்களை தொடர்ந்து அவதூ றாக பேசி வரும் திருமாவளவன், தமிழ்நாட்டில் பிறந்தார் எனக் கூறுவதற்கு வெட்கமாக உள்ளது. பணம் சம்பாதிப்பதற்காகவே அவர் தமிழ் கடவுள்களை பற்றி அவதூறாக பேசி வருகிறார்” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x