Published : 09 Jan 2021 03:10 AM
Last Updated : 09 Jan 2021 03:10 AM

கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பனியன் நிறுவன தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் - ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்.குருமூர்த்தி (28). இவர், அப்பகுதியிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 6-ம் தேதி வீட்டில் இருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், மண்ணரையில் உள்ள சாயப்பட்டறை கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து இறந்துகிடந்தது நேற்று முன்தினம் தெரியவந்தது. வடக்கு காவல் நிலைய போலீஸார் சென்று, சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், "கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து குருமூர்த்தி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x