Published : 09 Jan 2021 03:11 AM
Last Updated : 09 Jan 2021 03:11 AM
வேப்பனப்பள்ளி அருகே மிகப்பெரிய கருஞ்சாந்து ஓவியத் தொகுப்பு உள்ளது என கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித் துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் கொங்கணப்பள்ளி அருகே 200 அடி நீளமுடைய ஒரு குகை போன்ற பழங்கால மனிதனின் வாழ்விடத்தை, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக காப்பாட்சியர் கூறும்போது, ‘‘கருஞ்சாந்து ஓவியங் களில் மிகப்பெரிய தொகுதியாகும் இது. தமிழகத்திலேயே அதிக கருஞ்சாந்து ஓவியங்கள் இருக்கும் இடமாகவும் இது இருக்கலாம். இந்த ஓவியத் தொகுதியில் குறிப்பிடத்தக்கது புதிர்நிலை. இந்த புதிர் நிலையை மிகத் தெளிவாக கருஞ்சாந்தில் வரைந்திருக்கிறார்கள். விலங்கின் மீது மனிதன் அமர்ந்து செல்வது போல் ஐந்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அந்த ஓவியங்களில் ஒரு ஓவியம் ஒரு அடிஉயரமும் ஒன்றேகால் அடி நீளமும் கொண்டதாக உள்ளது. காடுகளைக் காட்டும் விதத்தில் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் வரையப்பட்டு இருக்கிறது. தாய் தெய்வத்தை வழி படுவது போல மண்டியிட்டு இரண்டு கைகளை நீட்டி கோரிக்கை விடுத்து வழிபடுவதாக உள்ளது.
அதற்கு அருகே அனில் போன்ற விலங்கு நிற்பதும் வரையப்பட்டுள்ளது. ஒரு அச்சை மையமாகக் கொண்டு வரையப்பட்டுள்ள சக்கரம் ஆரங்களோடு இரண்டு சுற்றுகளைக் கொண்ட வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT