Published : 08 Jan 2021 06:53 AM
Last Updated : 08 Jan 2021 06:53 AM
கடலூர், விழுப்புரம் மாவட்டங் களில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமகவினர் பேரணி நடத்தினர்.
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 14-ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 4-வது கட்ட போராட்டமாக நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், நெல்லிக்குப்பம், விருத்தாசலம், பண்ருட்டி உள்ளிட்ட 5 நகராட்சி அலுவலகங்களில் நேற்று பாகவினர் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மனு அளித்தனர்.
கடலூர் நகராட்சி அலுவலகத் திற்கு பேரணியாக சென்றனர். பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமையில் மனு அளித்தனர். மாநில துணைப்பொது செயலாளர் சண்முத்துகிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக்குழு தலை வர் பழதாமரைக்கண்ணன், முன்னாள் மாநில நிர்வாகி தர்மலிங்கம், நகர செயலாளர் ஆனந்த், போஸ்ராமச்சந்திரன், பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரத்தில் மாநில வன்னியர்சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பாமக மாநிலத்துணைத்தலைவர் சந்திரபாண்டியன், முன்னாள்மாவட்ட செயலாளர்கள் கலை யரசன், செல்வமகேஷ்,மாநில செயற்குழு உறுப்பினர் சஞ்சிவி, மாவட்ட செயற்குழு பூக்கடை கண்ணன் மற்றும் பலர் பேரணியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் காந்தி சிலைஅருகே பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் தங்க ஜோதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் அன்புமணி, மாவட்ட செயலாளர் கள் புகழேந்தி, பால சக்தி, முன் னாள் மாவட்ட செயலாளர்கள் ஜெகன்,சுரேஷ், துரை சுப்பிரமணி, செழியன்,அன்பு உள்ளிட்ட பாமக நிர்வாகி கள் பங்கேற்றனர். சிறப்பு அழைப் பாளராக முன்னாள் எம்பி தன்ராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.இதே போல திண்டிவனத்தில் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கருணாநிதி, மலர் சேகர், கனல் பெருமாள், ஜெயகுமார் , ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இப்போராட்டங்களைத் தொடர்ந்து திண்டிவனம், விழுப்புரம் நகராட்சி ஆணையர்களை சந்தித்து வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரும் மனுக்களை அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT