Published : 08 Jan 2021 06:54 AM
Last Updated : 08 Jan 2021 06:54 AM
எருதுவிடும் விழாவில் பங்கேற்கும் வீரர்கள், கரோனா தொற்று இல்லை என்ற சான்று பெற்றிருக்க வேண்டும் என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எருது விடும் விழா தொடர் பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். எஸ்பி பண்டி கங்காதர் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருதுவிடும் விழா மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
எருது விடும் விழாவை நடத்தும் விழாக் குழுவினர், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காளைகளுக்கு முன்னுரிமை வழங்கி, விழா நடைபெறும் நாளன்று காலை 9 மணிக்கு காளைகளை பதிவு செய்து, காலை 10 மணிக்கு எருது விடும் விழா தொடங்கப்பட்டு மதியம் 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும். காளைகளின்பந்தய தூரம் நேர்கோடாக இருக்க வேண்டும். போட்டியில் பங் கேற்கும் காளைகளின் வயது குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். காளை களை தொடர்புடைய கால்நடை மருந்தகத்தில் பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்று விழா நடைபெறும் இடத்தில் மருத்துவக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
எருது விடும் விழாவுக்கு வருகை தரும் காளைகளை துன்புறுத்தல் இல்லாதவாறு பாதுகாக்க வேண்டும். விழா நடைபெறும் திறந்த வெளியில் சமூக இடைவெளியைக் கடை பிடித்து, முகக்கவசம் அணிந்து, உடல்வெப்ப பரிசோதனை செய்த பிறகே 50 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.
விழாவில் கலந்து கொள் ளும் வீரர்கள் அனைவரும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் கூடத்தில் கரோனா தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும். எனவே அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும்அரசின் விதிமுறைகளைமுறையாகப் பின்பற்ற வேண் டும்.
இவ்வாறு ஆட்சியர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், எருது விடும் விழா கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT