Published : 08 Jan 2021 06:54 AM
Last Updated : 08 Jan 2021 06:54 AM
ஏரல் வட்டம் மாரமங்கலம் மற்றும் கடையனோடை, வைகுண்டம் வட்டம் செய்துங்கநல்லூர் ஆகிய 3 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 18 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு, ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி இம்மூன்று கிளினிக்குகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இங்கு குழந்தைகளுக்கான தடுப்பூசி, சர்க்கரை நோய் பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படும். சிறிய ஆய்வக வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம மக்கள் உள்ளூரிலேயே சிகிச்சை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கருங்குளம் அரசுமேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 28 மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், கோட்டாட்சியர் தனப்ரியா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கிருஷ்ணலீலா, ஒன்றியக்குழு தலைவர்கள் ஆழ்வார்திருநகரி வசந்தா, கருங்குளம் கோமதி ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செல்வகுமார், ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்
தோவாளை ஊராட்சி ஒன்றியம் ஆரல்வாய்மொழி துணை சுகாதாரநிலையத்துக்குட்பட்ட குமாரபுரம்துணை சுகாதார நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தின் 5-வது மினி கிளினிக்கை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்.ஏற்கெனவே காட்டுப்புதூர் ஊராட்சி, தர்மபுரம் ஊராட்சி இலந்தையடித்தட்டு, அஞ்சு கிராமம் காவல் நிலையப்பகுதி, பறக்கை ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் மினி கிளினிக் செயல்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 15 மினி கிளினிக்குகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT