Published : 08 Jan 2021 06:54 AM
Last Updated : 08 Jan 2021 06:54 AM
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு எவ்வித கட்டணமுமின்றி பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படுகிறது. ஒரு சிலர் சட்டவிரோதமாக இணைப்புக்கு பணம் பெறுவதாக புகார்கள் வந்துள்ளன.
எனவே, மாநகராட்சி பெயரை பயன்படுத்தி தனியார் மற்றும் தனிப்பட்ட நபர் எவரேனும் பாதாள சாக்கடை இணைப்புக்கு கட்டணம் கேட்டால், மாநகராட்சி அலுவலகத்துக்கு 0461 232 6901 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT