Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM
விருதுநகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்டச் செயலாளர் முகமது ரியாஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தை சீல் வைக்க வந்த அதிகாரிகளைக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஏராளமான போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு அதன் தலைவர் ஹக்கீம் தலைமை வகித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT