Published : 07 Jan 2021 03:16 AM
Last Updated : 07 Jan 2021 03:16 AM
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோயில் நிர்வாக அதிகாரிகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மண்டல இந்துசமய அறநிலையத்துறை சார்பில், பள்ளி மாணவ,மாணவியருக்கான திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு ஒப்புவித்தல் போட்டி மற்றும் கட்டுரை போட்டி வரும் 9-ம் தேதி(சனிக்கிழமை) காலை 10 மணிக்குசங்கரராமேசுவரர் கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டிகள் 1 முதல் 5-ம் வகுப்பு வரை, 6 முதல் 8-ம் வகுப்புவரை, 9 முதல் பிளஸ்-2 வரைபடிக்கும் மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. கட்டுரைப் போட்டிக்கு அழகான கையெழுத்துக்கு தனி மதிப்பெண்கள் உண்டு. போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் பள்ளி அடையாள அட்டையுடன், முகக்கவசம் அணிந்து வர வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் வரும் 8-ம் தேதிக்குள் 0461 232 0680 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 98941 14838 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT